நடிகர் விஜய் மூன்று ஆண்டுகளுக்கு ‘லீவு’
திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து நடிகர் விஜய் 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது;
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இப்படத்தை வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியிட்ட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் தனது 68வது படத்தை நடிக்கவுள்ளார் விஜய். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய் தரப்பில் புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, வெங்கட் பிரபு படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கவிருப்பதாவும் எந்த படங்களிலும் நடிப்பதில்லை எனவும் விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த மூன்று வருட பிரேக் என்பது, 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளாரா விஜய் இணையத்தில் கருத்துகள் தீயாய் பரவி வருகின்றன.அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து படங்களில் நடித்தால் தேர்தல் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று மூன்று ஆண்டுகள் பிரேக் எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.