சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
சின்னமனுாரில் முதியவர் இறப்பில் உள்ள மர்மம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே ஓடைப்பட்டி வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 59.) இவர் இவரது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். பாஸ்கரன் இறப்பு குறித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி உள்ளனர். எனவே இவரது மகன் பிரபாகரன், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஓடைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.