விருப்பமில்லாமல் பாடிய பாட்டு : சூப்பர் டூப்பர் ஹிட்...!

ஏ.ஆர்.ரகுமான் வற்புறுத்தியதால்… ட்யூன் பிடிக்காமல் எம்.எஸ்.வி., பாடிக்கொடுத்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்… ஆனது.;

Update: 2024-07-18 03:15 GMT

கோப்பு படம் -இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏ.ஆர்.ரஹ்மான் 

கோலிவுட்டின் மெல்லிசை மன்னராக இருந்தவர்  எம்.எஸ்.விஸ்வநாதன். பல வருட உழைப்புக்கு பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி கொண்டே வந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது ஒருமுறை இவரின் வீட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் சந்திக்க வருகிறார். அவரை பார்த்த எம்.எஸ்.விக்கும் சந்தோஷம். என்னப்பா இந்த பக்கம் எனக் கேள்வி கேட்கிறார். ஐயா என்னுடைய அடுத்த படத்தில் நீங்க ஒரு பாட்டு பாட வேண்டும். அதற்காக தான் வந்தேன் எனக் கூறுகிறார்.

எம்.எஸ்.வியோ நான் இப்போலாம் பாடுவதே இல்லையே என மறுத்துவிட ரஹ்மானோ தன்னுடைய ட்யூனை கொடுத்து கேளுங்கள் என சொல்லி விட்டு சென்றார். அதை கேட்ட எம்.எஸ்.விக்கு மேலும் குழப்பம். இதுக்கு எப்படி பாட முடியும். சரி முடியாது என சொல்லி விடுவோம் என ரஹ்மான் வீட்டிற்கு செல்கிறார். அந்த நாள், ரஹ்மானின் பிறந்த நாளாக இருந்து இருக்கிறது. இவரை பார்த்த ரஹ்மான் ஆர்வத்துடன் வரவேற்றார். சொல்லி இருந்தால் நானே வந்திருப்பேனே ஐயா எனக் கேட்டார்

பிறந்தநாளும் அதுவுமாக ஏ ஆர் ரகுமான் சங்கடப்படும் படி எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்து, வந்தது தான் வந்து விட்டோம் பாடலை பாடிவிட்டே சென்று விடுவோம் என்று முடிவு செய்துள்ளார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் சென்று எம்எஸ் விஸ்வநாதன் பாடுவதற்கு தயாரான பொழுது ஆர்மோனிய பெட்டியை வாசிப்பவரை வெளியே அனுப்பி விட்டு அந்த ஹார்மோனி பெட்டியில் வந்து அமர்ந்து ஏ ஆர் ரகுமான் வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

ஐயா நான் பாடல் சொல்லித் தர மாட்டேன். நீங்களாகவே பாடுங்கள் என்று ஏ ஆர் ரகுமான் சொல்ல... தம்பி நானாக பாட மாட்டேன் நீ சொல்லித் தருவதைத்  தான் பாடுவேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் ஒருபுறம் அடம்பிடிக்க..... நான் ராகத்தை சொல்கிறேன், நீங்கள் உங்கள் இஷ்டப்படி அந்த ராகத்திற்கு ஏற்றவாறு பாடுங்கள் என்று ரகுமான் கூற ஒரு வழியாக ரெக்கார்டிங் ஆரம்பித்தது. சுமார் 4மணி நேரம் நடந்த ரெக்கார்டிங் முடிந்த பின்பு பாடலை இசைத்து காட்டுமாறு எம் எஸ் வி ரகுமானிடம் கேட்டுள்ளார்.

இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது நான் பிறகு உங்களுக்கு போட்டு காட்டுகிறேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். ஒருவேளை நாம் சரியாக பாடவில்லையோ..!! இல்லை நாம் பாடிய பாடல் ரகுமானுக்கு பிடிக்கவில்லையோ..!? என்று குழப்பத்தோடு சென்ற எம் எஸ் விஸ்வநாதன் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தை பார்த்து ரகுமானிடம் சொல்லி அந்தப் பாட்டை கொஞ்சம் போட்டு காட்ட சொல்லுப்பா என்று ரெக்கமண்ட் கேட்டுள்ளார்.

எஸ் பி பாலசுப்ரமணியம் ரகுமானிடம் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் கேட்டபடி பாடலை போட்டு காட்ட சொல்லி கேட்டிருக்கிறார். ரகுமானும் பாடலை ஓரளவிற்கு முடித்து விட்டு போட்டுக் காட்டியுள்ளார். அதை கேட்ட எம் எஸ் விஸ்வநாதன் தான் பாடிய பாடலா? இவ்வளவு அருமையாக வந்துள்ளது என்று ஆச்சரியப்பட்டு போனாராம்.

எம்.எஸ்.விக்கே பிடிக்காமல் கம்போஸ் செய்த பாடல் தான் “சங்கமம்” படத்தில் வரும் “ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க” என்ற பாடல். ரஹ்மானை மட்டுமல்ல ரசிகர்கள் எம்.எஸ்.வியையும் ஏமாற்றவில்லை. பாடல் இன்று வரை ஹிட் பட்டியலில் தான் இருக்கிறது.

Tags:    

Similar News