கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
தேனி அருகே அன்னஞ்சி கிராமத்தில் கடன் தொல்லை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார்;
தேனி அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே அன்னஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், (வயது நாற்பத்தி மூன்று). விவசாயான இவர், கடன் தொல்லையில் சிக்கி அவதிப்பட்டு வந்தார். தனது மனைவி முத்துமாரியிடம் இது தொடர்பாக புலம்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற அவரை காணவில்லை. அப்பகுதியில் தேடிப்பார்த்த போது, தனியார் கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.