பார்வையற்ற தம்பதிக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் இணைப்பு
க.மயிலாடும்பாறை ஊராட்சியில் பார்வை குறைபாடு உடைய தம்பதிக்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.;
கலெக்டரிடம் விண்ணப்பித்த ஒரே நாளில் பார்வையற்ற தம்பதிக்கு மயிலாடும்பாறை ஊராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.மயிலாடும்பாறை ஊராட்சியில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் ஜெயபால், அவரது மனைவி நிர்மலா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீர் பிடிக்கவே இவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் கலெக்டர் முரளீதரனை சந்தித்து தங்கள் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டும் என மனு கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் முரளீதரன், இந்த தம்பதிக்கு 24 மணி நேரத்திற்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி இவர்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கப்பட்டது.