சாக்கோட்டையில் அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
சாக்கோட்டையில் அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் உழவர் பயிற்சி நிலையம், சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு அங்கக வேளாண்மையை பற்றி பயிற்சி நடத்த உள்ளது. இந்த பயிற்சியானது சாக்கோட்டையில் உள்ள கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.
பயிற்சி தலைப்பு அங்கக வேளாண்மை ஆகும். அதிக பின் விளைவு கொண்ட ரசாயண வேளாண் முறையினை தவிர்த்து இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுவதில் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை ஆகும், தேவையில்லாமல் உரம் இடுவது, இரசாயண பூச்சி கொல்லிகளை இடுவது இதன் மூலம் தவிர்க்கப்படும்.
எனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் தங்களது - பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல், குறைந்தப்பட்ச கல்வித் தகுதியான 10ம் வகுப்பு படித்ததற்கான கல்வி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் ஆகஸ்டு 25ம் தேதிக்குள் கண்ணன், வேளாண்மை அலுவலர், உழவர் பயிறச்சி நிலையம் இருப்பு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர் செல்: 9095581534 அவர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இல்லையெனில் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சியில் கலந்து கொண்டு தொழில் முனைவோராக மாறி தங்களது வாழ்க்கையினை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.