நெம்மேலி கிராமத்தில் நிலக்கடலை பயிர் மேலாண்மை பயிற்சி..!
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், நெம்மேலி கிராமத்தில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கீழ் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி நெம்மேலி கிராமத்தில் நடைபெற்றது
இப்பயிற்சியில் நெம்மேலி கிராமத்தை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர் .பயிற்சியில் விதை சான்று துறை வேளாண்மை அலுவலர் சங்கீதா விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி செய்வதற்கான ரகங்கள் தேர்வு ,விதை நேர்த்தி, கைகளை எடுத்தல், ஜிப்சம் இடுதல் நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா நிலக்கடலையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து இயற்கை முறையில் சாகுபடி செய்தல் பற்றி எடுத்து கூறினார். பயிற்சி நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ் நன்றி தெரிவித்தார்.
பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில் நுட்ப மேலாளர் அய்யாமணி மற்றும் ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறான பயிற்சிகள் மற்றும் வேளாண் துறையின் வழிகாட்டுதல்கள் மூலமாக விவசாயிகள் சாகுபடி முறைகளை அறிந்துகொள்வதுடன் விளைச்சலுக்கான கூடுதல் வழிமுறிகளையும் அறிந்துகொள்கிறார்கள்.