தென்காசி மாவட்டத்தில் பராமரிப்பு பணி: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் மின் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2021-08-06 06:13 GMT

தென்காசி மாவட்டத்தில் 07/08/2021 சனிக்கிழமை அன்று மின் தடை ஏற்படும் இடங்கள் மின்வாரிய செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் 2  மணி வரை ஆலங்குளம், ஊத்துமலை, ஓ.துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், கழுநீர்குளம்,  கீழப்பாவூர் ஆகிய பகுதிகளிலும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கேளையாப்பிள்ளையூர் கடையம், மாதாபுரம், தோரணமலை, வள்ளியம்மாள்புரம் பொட்டல்புதூர், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, புளியங்குடி, வீரசிகாமணி, சாம்பவர்வடகரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News