அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்
அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை ஜூலை 11 -ல் நடைபெறுகிறது;
அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி சேர வரும் 11- ஆம் தேதி சிறப்பு மேளா நடைபெறுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா 11.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், முத்துப்பட்டி, சிவகங்கையில் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த தொழிற் பழகுநர் பயிற்சி மேளாவில் மாநில அரசு நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 40-க்கு மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கையினை நடத்த உள்ளனர்.மேலும், இந்த தொழிற் பழகுநர் பயிற்சி மேளாவில் புதிய நிறுவனங்களும் கலந்து கொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம். இந்த மேளாவில்,மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு 04575-290625-ஐ அல்லது 9499055781 என்ற அலைபேசிகளுக்கும் அல்லது உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வேலைவாய்ப்பு அலுவலக முதல் மாடி, சிவகங்கை அவர்களை தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.