சிவகங்கையில், பல்துறை பணி விளக்க கண்காட்சி: அமைச்சர் தொடக்கம்

அரசின் சார்பில் நடைபெறவுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார்;

Update: 2022-03-26 09:30 GMT

75-வது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா முன்னிட்டு ,தமிழக அரசின் சார்பில் நடைபெறவுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார்:,

75-வது சுதந்திர தின விழா, சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் அரசின் அனைத்துத்துறைகளின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சித்தலைவர்

ப.மதுசூதன் ரெட்டி முன்னிலையில்  30-க்கும் மேற்பட்ட துறைவாரியான அரங்குகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார் பின்னர்  அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா கொண்டாட்டங்களை தமிழகம் முழுவதும் ஓராண்டு காலம் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், இதுவரை நமது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இதுவரை பெரியளவில் வெளிக்கொணராக சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் அரிய புகைப்படங்களும், தேசத்தலைவர்களின் புகைப்படங்களும் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தோட்டக்கலைத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, பொதுப்பணித்துறை. மாவட்ட சமூகநலத்துறை, மீன்வளத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை. சுற்றுச்சுழல் துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை போன்ற 30-க்கும் மேற்பட்ட துறைவாரியான அரங்குகளை பொதுமக்கள் பார்த்து பயனடைய வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 62 பயனாளிகளுக்கு ரூ.7,56,000 மதிப்பீட்டில் மாதாந்திர முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் சுயதொழில் புரிந்திட 70 பயனாளிகளுக்கு ரூ.32,20,000 மதிப்பீட்டிலான கடனுதவியினையும், சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.3,77,110ஃ- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.7,70,000, மதிப்பீட்டிலும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 115 பயனாளிகளுக்கு ரூ.39,45,615, மதிப்பீட்டில் உபகரணங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.50,000மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்புப்பெட்டிகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.1,65,000மதிப்பீட்டில் இறப்பு உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.1,00,000மதிப்பீட்டில் புல்வெட்டும் கருவிகளையும். வேளாண் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.10,15,750மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் ரூ.1,04,23,575மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறைவழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி, சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆன்ந்த், நகர்மன்ற துணைத்தவைர் கார்கண்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ராஜசெல்வன், நகர்மன்ற உறுப்பினர்கள்; மா.இராமநாதன்,; அ.அயுப்கான் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News