சிவகங்கை மாவட்டத்தில் 5ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்: கலெக்டர்

Vallalar Memorial Day-5 ந்தேதியன்று வடலுார் இராமலிங்கனார் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக்கடைகள் மற்றும் அனைத்துபார்களுக்கும் விடுமுறையினை கலெக்டர் அறிவித்துள்ளார்.;

Update: 2023-02-03 15:07 GMT

Vallalar Memorial Day

Vallalar Memorial Day-தமிழகத்தில்  முக்கிய தினங்களில் மதுக்கடைகள்  மூடப்படுவது வாடிக்கையான நிகழ்வாகும். அந்த வகையில்  வரும் ௫ந்தேதி  மதுக்கடைகள் சிவகங்கை மாவட்டத்தில் மூடப்படும் என கலெக்டர் மேகநாத ரெட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் வருகின்ற 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும்மதுபானம் அருந்தும் கூடங்கள் மூடப்படும் எனகலெக்டர் மதுசூதன் ரெட்டி, தகவல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் கேன்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை 05.02.2023 அன்று முழுவதுமாக மூடப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News