நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-01-10 12:02 GMT

நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற  தடுப்பூசி முகாம். 

சிவகங்கை மாவட்டம்,  திருப்பத்தூர் தாலுகாவில்,   நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில்,  கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு, அரசு அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில்,   2007 ம் ஆண்டுக்கு முன் பிறந்த 10,ம் வகுப்பு, 11,ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100க்கும் மேற்கொண்டாருக்கு,  சுகாதாரத்துறையினர் ஏற்பாட்டில்,  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி, மருத்துவர் குணவதி, செவிலியர்கள் அனிதா, லட்சுமி, மீனாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News