பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், தலைமையில் நடைபெற்றது

Update: 2023-05-25 08:00 GMT

பைல் படம்

சிவகங்கை ்மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் இன்றையதினம் நடைபெற்ற வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தியின்) மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தம் 320 கோரிக்கை மனுக்களில்தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய பயன்களை பயனாளிகளுக்கு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், தலைமையில் நடைபெற்றது.

மானாமதுரை வட்டத்திற்கான வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தியில்) மாவட்ட ஆட்சித்தலைவர்  கலந்து கொண்டு, மானாமதுரை வருவாய் கிராமங்களான செய்களத்தூர், காட்டூரணி, மானம்பாக்கி, மாங்குளம், கே.கே.பள்ளம், மேலப்பிடாவூர், வடக்கு சந்தனூர், எஸ்.காரைக்குடி, சூரக்குளம், எழுநூற்றிமங்கலம், மேலநெட்டூர், பி.ஆலங்குளம் ஆகியx பகுதிகளிலுள்ள பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைப் பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய பயன்களை பயனாளிகளுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும், இன்றைய தினம் நடைபெற்ற வருவாய் தீர்வாணையத்தில், சிவகங்கை வட்டத்தில் 57 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 13 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 27 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 15 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 08 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 74 மனுக்களும், மானாமதுரை வட்டத்தில் 30 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 63 மனுக்களும் சிங்கம்புணரி வட்டத்தில் 33 மனுக்களும் என, மொத்தம் 320 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மேற்கண்ட மனுக்களின் மீது அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, உரிய களஆய்வுகள் மேற்கொண்டு ஒருவாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்றையதினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சி யர்கள் கு.சுகிதா (சிவகங்கை, பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்து வட்டங்களிலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News