பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம்: ஆட்சியர் தகவல்

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2022-08-16 05:00 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் அளிக்கப்படுவதாக  ஆட்சியர் தெரி்வித்துள்ளார்.

2022-23ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில்  மீன்வளர்ப்போரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் நிலையான வருமானம் பெறுவதை உறுதி செய்திடவும் பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில், மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு மீன்தீவனம் உரங்கள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் பண்ணை பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்களுக்கான ஒரு அலகிற்கான செலவினம் ரூ36000-ல் 50 மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18000 வீதம் மானியம் வழங்கி மேற்படி திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில், பயன்பெற விரும்புவோர், சிவகங்கை மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில: விண்ணப்ப படிவத்தினை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 53,  யூனியன் வங்கி மாடியில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை – 630561, தொலைபேசி எண்.04575 – 240848 என்ற முகவரிக்கு 18.08.2022 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

Tags:    

Similar News