சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம்

தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்;

Update: 2022-05-28 09:00 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு, சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்,  காவல்துறையின் சார்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், சாலைபாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், ஆய்வுகள், விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறை ஆகியவைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பதியப்பட்ட வழக்குகள், தலைக்கவசம் இல்லாதோர், சாலை விதிகளை பின்பற்றாதோர், விபத்துகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழங்குகளின் விபரங்கள் குறித்தும், சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், நிலுவையில் உள்ள நிவாரணம் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  கூறியதாவது: விபத்தில்லாத சாலை போக்குவரத்தினை ஏற்படுத்தி, பொதுமக்களை பாதுகாத்திடும் பொருட்டு, தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலை விதிகளை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடித்திடும் பொருட்டு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் தேவையான இடங்களில் மையத்தடுப்புச் சுவர் ஏற்படுத்திடவும்.

பழுதடைந்த சாலைகளை சீரமைத்திடவும், வளைவுகளில் பிரதிபளிக்கும் அட்டைகள் ஒட்டவும், இணைப்புச்சாலைகள், பிரதான சாலைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைத்திடவும், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வேகத்தடுப்புகளை ஏற்படுத்துவது, விபத்து ஏற்படுவதாக கணடறியப்படும் இடங்களில் மின் விளக்குகள் அமைத்தல், குறுகலான சாலைப்பகுதிகளை அகலப்படுத்துதல், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, சாலைவிதிகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் மு.முத்துக்கழுவன் (சிவகங்கை), சி.பிரபாகரன் (தேவகோட்டை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News