சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-27 09:38 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் கோரிக்கைகளை களைவதற்காக உள்கள் தொகுதியின் முதலமைச்சர் என்னும் திட்டத்தினை ஏற்படுத்தியும், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம் போன்றவற்றின் வாயிலாக மனுக்களை பெற்று உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் தலைமையிடத்திற்கு வந்து செல்லும் நேரம், வேலைப்பளு, செலவு போன்றவற்றினை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வசிப்பிடங்களில் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு வட்ட அளவில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடத்துப்பட்டு வருகிறது.

இவ்வாறு நடத்தப்படும் முகாம்களின் பயன் முழுவதுமாக பொதுமக்களுக்கு சென்ற சேர்ந்திட வேண்டும் என்ற வகையில் முகாம்கள் நடத்தப்படுகிறது.

அரசு வழங்கும் பயன் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். பொதுமக்கள் மீண்டும் மீண்டும் ஒரே கோரிக்கைகளாக வந்து செல்லும் சூழ்நிலை தவிர்த்திடும் பொருட்டு அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்.

மனுக்கள் மீது காலதாமதமில்லாமல் உரியகாலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது நலன் மற்றும் பொது சொத்து சார்ந்த மனுக்களுக்கு பிற துறைகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

அலுவலர்கள் முகாம்களின் மூலம் பெறப்படும் மனுக்களை தவிர்த்து தனிப்பட்ட முறையில் தரப்படும் மனுக்களுக்கும் களஆய்வு மேற்கொண்டு தகுதியான பயனாளிகளக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட பணியாற்றிட வேண்டும். தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலமுறை இடைவெளியில் கிராமங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் மு.முத்துக்கழுவன் (சிவகங்கை), சி.பிரபாகரன் (தேவகோட்டை), தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு.காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சௌந்தரராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ப.மங்களநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சு.தனலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து பங்கேற்றனர்.

Tags:    

Similar News