சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
பல்வேறு துறைகளின் சார்பில் 135 பயனாளிகளுக்கு ரூ.16.44 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கல்;
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 135 பயனாளிகளுக்குரூ.16.44 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார், முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி கிராமத்தில் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இக்கிராமப்புறத்தில், வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாகச் சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று தகுதியான நபர்களுக்கு அதன் பயன்களை கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் இம்முகாம்கள் அடிப்படையாக அமைகிறது.
மேலும், இப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கமும் நிறுவதற்கான ஆணையும் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மின்மாற்றி, சாலை வசதி, பேருந்து வசதி, கழிப்பிட வசதி போன்றவைகளை ஏற்படுத்திடவும், மின் மயானச்சாலை சீரமைப்பிற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய்த்துறையின் மூலம் பல்வேறு உதவித்தொகை வழங்கும் திட்டம், வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா மாறுதல், பட்டா மாறுதல் (உட்பிரிவு) ஆகியவற்றின் கீழ் 79 பயனாளிகளுக்கு ரூ.2,25,500 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் சாhபில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்,5 பயனாளிகளுக்கு ரூ.13,506 மதிப்பீட்டிலும், மருத்துவத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவப் பெட்டகம் வழங்கும் திட்டத்தின் கீழ், 14 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.3,10,000 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராம மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டம் ஆகியவற்றின் கீழ் 17 பயனாளிகளுக்கு ரூ.10,75,000 மதிப்பீட்டிலும் மற்றும் தாட்கோ மூலம் 12 தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.16.44 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்;ச்சித் திட்டத்துறை ஆகியத் துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ,மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மு.முத்துக்கழுவன், மானாமதுரை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, இணை இயக்குநர்கள் கே.வெங்கடேஸ்வரன் (வேளாண்மைத்துறை), நா.நாகராஜன் (கால்நடைப் பராமரிப்புத்துறை), துணை இயக்குநர்கள் எஸ்.ராம்கணேஷ் (சுகாதாரப்பணிகள்), கு.அழகுமலை (தோட்டக்கலைத்துறை), துணைப்பதிவாளர் (பால்வளம்) இரா.செல்வம், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு.காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், ஊராட்சி மன்றத்தலைவர் ரவி, மானாமதுரை வட்டாட்சியர் ஆர்.தமிழரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.