சிவகங்கையில் வரும் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.;
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் "வேலைவாய்ப்பு வெள்ளி" என்ற தலைப்பின் கீழ் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் "வேலைவாய்ப்பு வெள்ளி" என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, வரும் 22.04.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார்; நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.
மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன்; இம்முகாமில் ,கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாமில், பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது என, தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இம்முகாமில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.