சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குடும்ப அட்டை கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 270 மனுக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 270 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது. மனுக்கள் மீது தீவிர கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில்;, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.