மணிமேகலை விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
2021-2022-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்;
2021-2022-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் வெளியிட்ட தகவல்: ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு , வட்டார அளவிலான கூட்டமைப்பு , மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்க ரூ.208 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, 2021-2022-ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருதுக்கான தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்காணும் விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் 31.03.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம்.