அரசு தானியங்கி பணிமனையில் வரும் 30ம் தேதி பயிற்சியாளருக்கான நேர்முகத் தேர்வு
சிவகங்கை அரசு தானியங்கி பணிமனையில் வரும் 30ம் தேதி பயிற்சியாளருக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.;
சிவகங்கை அரசு தானியங்கிப் பணிமனை, தொழில் பழகுநர்களை ஆண்டுதோறும் தொழிற் பயிற்சியில் சேர்த்துக் கொண்டு பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பிரிவில் இரண்டு மற்றும் பிரிவில் ஒரு பயிற்சியாளர் எனத் தேவைப்படுவதால், வரும் 30.06.2022 தேதி அன்று காலை 10.00 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
மேலும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் அடிப்படை கல்வித்தகுதி, சாதி சான்றிதழ் (அசல்) மற்றும் தொழிற்கல்வி சான்றிதழ்களுடன் நேரில் கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக, மேலும் விபரங்களுக்கு 04575 – 290732 என்ற தொலைபேசிக்கு அல்லது தொழில்நுட்ப உதவியாளர், அரசு தானியங்கிப் பணிமனை, சிவகங்கை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மேலும், வயது வரம்பு இல்லை. ஊதியம் பழகுநர் பயிற்சி நாட்களில் அரசு நிர்ணயிக்கும் ஊதியம் வழங்கப்படும். காலம் ஓராண்டு ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.