தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு : ஆட்சியர் வழங்கல்

தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4 தேர்விற்கு தயாராவதற்கான கையேடுகளை கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

Update: 2022-05-22 09:30 GMT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4 தேர்விற்கு தயாராகுவதற்கான கையேடுகளை கல்லூரி மாணவர்களுக்கு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4 தேர்விற்கு தயாராகுவதற்கான கையேடுகளை கல்லூரி மாணவர்களுக்கு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்:

சிவகங்கையில், உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு, கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4 தேர்விற்கு தயாராகுவதற்கான கையேடுகளை வழங்கி தேர்வில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார்.

இந்த ஆய்வின் போது, அரசு கல்லூரி மாணவர் விடுதியில், வழங்கப்படும் உணவின் தரம், அளவுஇ குடிநீர், கழிப்பிட வசதி, விடுதியினை பராமரிக்கும் முறை, மாணவர்களின் வருகைப்பதிவு, தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் அவர்களின் பெயர், ஊர், கல்வி பயிலும் ஆண்டு, சுய விவரம் போன்றவற்றை கேட்டறிந்து அவர்களின் எதிர்கால திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால இலட்சியங்கள் தங்களது படிப்பின் நோக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்து செயலாற்றிட வேண்டும். படிப்பதுடன் கூடுதலான தனித்திறமையினை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களுக்குள்ள விளையாட்டுத்திறனை வளர்த்துக் கொள்ள மாவட்ட விளையாட்டு துறையினருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

படிக்கும் காலத்தில் கிடைக்கும் நேரத்தினை பொழுதுபோக்கின் காலத்தினை வீணடிக்காமல் தங்களது பெற்றோர்களின் எண்ணம், அவர்களது சூழ்நிலை தங்களது நிலை அறிந்து உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்திட வேண்டும். தினந்தோறும் குறிப்பிட்ட நேரம் செய்தித்தாள்கள் வாசிப்பதுடன் உலகில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி-4-இக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு கிடைக்கும் காலத்தினை நல்லமுறையில் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளும் போது வெற்றி என்பது சாத்தியமாகும். 

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி விடுதியில் நூலகம் அமைப்பதற்கும்இ புத்தகம் வாசிப்பதனை தினந்தோறும் மேற்கொள்ளும் நடைமுறையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூலகத்தினை, நல்லமுறையில் பயன்படுத்திட வேண்டும். அதிகமான புத்தகங்களை வாசிப்பதை விட தேவையான அவசியமான பாடங்களை படிக்கும் போது தேர்வினை எளிதில் எதிர்கொள்ளலாம். எனவே இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி. இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.மங்களநாதன் வட்டாட்சியர்கள் செல்வராணி, பாலாஜி, கோட்ட ஆய அலுவலர் கண்ணன் விடுதிக்காப்பாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News