சிறுபான்மையின மாணவர்களுக்கான உதவித் தொகை: ஆட்சியர் தகவல்
சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்தேசிய கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது;
மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மைய ஃ மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐடிசி வாழ்க்கை தொழிற் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின், தேசிய கல்வி உதவித்தொகை என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தெகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும், மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தெகை இணையதளத்தில் ஏற்கெனவே, பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின், ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரி பார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.