சிவகங்கை அருகே மீட்கப்பட்ட கொத்தடிமை களுக்கு உதவித்தொகை வழங்கல்
சிங்கம்புணரி அருகே செங்கல் சூளையிலி ருந்து மீட்கப்பட்ட 9 கொத்தடிமைத் தொழிலா ளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டது;
சிங்கம்புணரி செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்ட 9 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை ரூ.2,70,௦௦௦ மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்:
சென்னை தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் கொத்தடிமைகள் தொழிலாளர் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் எஸ்.பால்துரை தலைமையில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆர்.ராஜ்குமார், சிங்கம்புணரி வட்டாட்சியர் ஐ.சாந்தி, சிங்கம்புணரி மண்டலத்துணை வட்டாட்சியர் எஸ்.ரமேஷ், திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் து.தீனதயாளன், சிங்கம்புணரி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, தென்சிங்கம்புணரி குரூப் கிராம நிர்வாக அலுவலர் ரா.ராஜேஷ்குமார், சிங்கம்புணரி காவல் உதவி ஆய்வாளர்கள் எஸ். ராஜவேல், யு.குணசேகரன், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பினர் எம்.மகாலெட்சுமி, சிவகங்கை
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜோதி, உறுப்பினர் எம்.கார்த்திகேயன், சிவகங்கை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக உதவியாளர் கார்த்திகேயா, தென்சிங்கம்புணரி குரூப் கிராம உதவியாளர் சி.சோலை ஆகியோர் அடங்கிய கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினர் 20.04.2023 அன்று முற்பகல் 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கண்ணமங்கலப்பட்டி பஞ்சாயத்து, சுக்காம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள செங்கல் காளவாயில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட கூட்டாய்வில்,மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த (லேட்) பூசாரி மகன் வீரன் ( 57). என்பவர் தனது மனைவி செல்வி ( 50). மகன்கள் திருமூர்த்தி ( 19), பிரகாஷ்(வயது 18), குணா (வயது 22) மற்றும் மகள் மகேஸ்வரி (வயது 29) மற்றும் மருமகன் முத்துகருப்பன் (38) மற்றும் மருமகள்கள் விஜயசாந்தி (18), கயல்விழி (வயது 20). ஆகிய 9 தொழிலாளர்கள் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள சேவுகபெருமாள் மகன் ரமேஷ் என்பவரின், பிரிக்ஸ் என்ற நிறுவனத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்துதேவகோட்டை வருவாய் கோட்டாட்சியரால், அனைவரும் மீட்கப்பட்டனர். அனைவருக்கும் விடுதலைச் சான்று அளிக்கப்பட்டு, அவர்களுடைய சொந்த ஊரான மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், புலிப்பட்டி கிராமத்துக்கு, அரசு அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், மேற்கண்ட நபர்களை கொத்தடிமைத் தொழிலாளர்களாக பணியில் வைத்திருந்த ரமேஷ் என்பவர் மீது கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ், சிங்கம்புணரி தாலுகா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 9 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு கொத்தடிமை மறுவாழ்வு நிதியிலிருந்து தலா ரூ.30,000வீதம் 9 நபர்களுக்கு ரூ.2,70,000மும், மேலும் 9 பேருடைய குடும்பங்களுக்கும் வீட்டுக்கு தேவையான அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.