திமுக ஆட்சியில் அரசு திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றம்: அமைச்சர் உதயநிதி பெருமிதம்
திமுக ஆட்சியில் அரசு திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றம் செய்வதாக அமைச்சர் உதயநிதி பெருமிதம் தெரிவித்தார்.
வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது என்பது அவர்கள் விருப்பம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என பேட்டியளித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்தார். இதில் முன்னதாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்ததுடன் கைப்பந்து போட்டியை துவக்கிவைத்ததுடன் வீரர்களுக்கு கைகுலுக்கி உற்ச்சாகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் மதுரையைவிட சிவகங்கையில் அதிகாரிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்றும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு திட்டஙகள் அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.
ஒரு சில திட்டஙகள் இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில் திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுருத்தியுள்ளேன் அதற்கு அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் இது குறித்த ஆய்வறிக்கையை முதல்வரிடம் வழங்கவுள்ளோம் என தெரிவித்ததுடன் வி.சி.க மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அது அவர்களது விருப்பம் என தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆட்சியர் ஆஷா உடன் இருந்தனர்.