சிவகங்கை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் கட்டிடம் : ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்;
சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அவ்வளாகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு மருத்துவ கட்டிட கட்டுமானப் பணிகளின் நிலை ஆகியன குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அவ்வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு மருத்துவ கட்டிட கட்டுமானப் பணிகளின் நிலை ஆகியன குறித்த ஆய்வின் போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு.
குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து, ஆகிய குறித்து, வட்டார மருத்துவ அலுவலரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் தொடர்பாக, நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில் ,வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆர்.எம்.நபீசாபானு மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.