சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளை மேம்படுத்த அரசு முயற்சி

வருடாந்திர வர்த்தகத்தினை ரூ.50 லட்சத்திற்கு மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-14 15:30 GMT

எஸ்.புதூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கற்பக விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம் வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிவகை ஏற்படுத்திய  தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள்  நன்றியினைத் தெரிவித்தனர். 

தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் சார்ந்த திட்டங்களை, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, அத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, விவசாயிகளை பயன்பெறச் செய்து வருகிறார்கள்.மேலும், விவசாயிகளின் நலன் காக்கின்ற அரசாக திகழ்ந்து வரும் தமிழக அரசு, விவசாயிகள் சாகுபடி செய்யும், உற்பத்திப் பொருட்களை, சந்தைப்படுத்துவதற்கும், விவசாயிகளை வணிகர்களாக உருவெடுக்கின்ற வகையில், பல்வேறு தொழில்நுட்ப ரீதியான கருத்துக்கள் மற்றும் பயிற்சிகளை சிறப்பாக வழங்கி வருகிறது.

குறிப்பாக, வேளாண் பெருங்குடி மக்கள் தங்களை குழுவாக ஒருங்கிணைத்து, அதன்மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது, 09 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி, தாங்களும் வணிகர்களாக உருவெடுக்கும் பொருட்டு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வேளாண் வணிகத்துறையின் சார்பில், 1,000 விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, அதில், ஒவ்வொரு விவசாயியும் தலா ரூ.1,000முதலீடு செய்தால், அத்தொகையுடன் அக்குழுவிற்கு தமிழக அரசின் மூலமாக, பங்கீட்டுத் தொகையாக ரூ.15.00 இலட்சமும், இதுதவிர, ஒன்றிய அரசின் பங்கீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு, விவசாயிகளின் மதிப்புக்கூட்டுப் பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்களை பயன்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் தமிழ்நாடு சிறுவிவசாயிகள் வணிக மேம்பாட்டு நட்பமைப்பு நிதி உதவியின் மூலம் எஸ்.புதூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கற்பக விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டு எண்ணெய் செக்கு மையத்தின் பயன்கள் குறித்து, பயனாளர்கள் தெரிவிக்கையில்,

வேளாண் வணிகத்துறையின் மூலம் 2018-2019 ஆம் ஆண்டில் எஸ்.புதூர், சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்களை சார்ந்த 900 விவசாயிகளிடம் தலா ரூ.1,000 பங்குத்தொகை பெற்று ரூ.9.00 இலட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு துறையின் மூலம் தலைமை செயல் அலுவலர் ஊதியம், கணினி மற்றும் இதர தளவாட பொருட்கள், அலுவலக வாடகை, பயிற்சி மற்றும் கண்டுணர்வு சுற்றுலா போன்றவற்றிற்காக ரூ.22.00 இலட்சம் நிதி உதவி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மூலம் மரச்செக்கு மற்றும் இயந்திர செக்குகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆரோக்கியமான கடலை, எள் மற்றும் தேங்காய் எண்ணெய் சரியான விலையில் நேரடியாக மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து தரமான நிலக்கடலை, கொப்பரை போன்ற மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு தேவையான அளவு பனங்கருப்பட்டி போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து, தரமான முறையில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொண்டு வரும் நிலக்கடலை, கொப்பரை போன்ற மூலப்பொருட்களையும் கூலிக்கு அரைத்து கொடுக்கப்படுகிறது. செக்கு எண்ணெய் தவிர தரமான விதை விற்பனை மற்றும் நெல் கொள்முதல் வணிகமும் மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் வணிகத்துறையின் வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இயக்குனர்கள் சேர்ந்து இக்குழுவின் மூலம் எங்களது நிறுவனத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறோம். இந்நிறுவனத்தில் சராசரியாக மாதம்தோறும் ரூ.1.75 இலட்சம் முதல் ரு.2.00 இலட்சம் வரை விற்பனை நடைபெறுகிறது. கடந்த 2022-2023 ஆம் நிதி ஆண்டில் ரூ.24.50 இலட்சம் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

மேலும், எங்களது நிறுவனத்திற்கு தரம் பிரித்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்யவும், கொப்பரை போன்ற பொருட்களை சுகாதாரமாக உலர வைப்பதற்கு சூரிய உலர்த்தி அமைத்திடவும், 10 கிலோ கடலை பருப்பிற்கு 4.5 லிட்டர் எண்ணெய் பிழிதிறன் பெற்றிடவும், நகர் பகுதியில் , மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொருட்களை காட்சிபடுத்திடவும் மற்றும் விற்பனை செய்திடவும், பொதுவான வாடகையில் வணிக மையம் ஏற்படுத்திடவும் குறிப்பாக, நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நிறுவனத்தின் பொருட்களை வெகுவாக பயன்படுத்தி, வருடாந்திர வர்க்கத்தினை ரூ.50.00 இலட்சத்திற்கு மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எங்களது பாரம்பரிய உற்பத்திப் பொருட்களை தரமான முறையில், சரியான விலைக்கு பொதுமக்களுக்கு வழங்கி வருவதில் மிகுந்த மன மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்று எங்களைப் போன்ற விவசாயிகள் சாகுபடி செய்யும், உற்பத்திப் பொருட்களை, சந்தைப்படுத்துவதற்கும், எங்களை வணிகர்களாக உருவெடுக்கின்ற வகையில், திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, எங்களது வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தித் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மேற்கண்ட உற்பத்தியாளர் குழுவைச் சார்ந்த இயக்குநர்கள் தெரிவித்தனர்.

தொகுப்பு - இரா.சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,  மு.ராஜசெல்வன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), சிவகங்கை மாவட்டம்.

Tags:    

Similar News