அரசு பள்ளிக்கு தன்னிறைவு திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்கள் நிதி உதவி

கடந்த 1985 - 1986 ஆம் ஆண்டு 10ம் வகுப்பில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தனர்.

Update: 2022-02-13 10:45 GMT

அரசு பள்ளிக்கு தன்னிறைவு திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்கள் நிதி உதவி வழங்கினர்.

அரசு பள்ளிக்கு தன்னிறைவு திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்கள் நிதி உதவி வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1985 - 1986 ஆம் ஆண்டு 10ம் வகுப்பில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிவாணன் வரவேற்றார். அவருடன் முன்னாள் மாணவர்கள் தங்களது மகிழ்வான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்பு தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தன்னிறைவு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு தேவையான கணிப்பொறி இயந்திரம், ஜெராக்ஸ் இயந்திரம், கண்காணிப்பு கேமரா, ப்ரொஜெக்டர் ( திரையின் மூலம் பாடம் நடத்தும் கருவி ) உள்ளிட்டவைகள் வாங்குவதற்காக முன்னாள் மாணவர்களின் பங்களிப்பாக ரூ1லட்சம் 8,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையினை தன்னிறைவு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெயரில் வரைவு காசோலை எடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணனிடம் வழங்கினர். அப்போது தாங்கள் படித்த ஆசிரியர்கள் பற்றியும், படித்த பருவங்கள் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்

Tags:    

Similar News