சிவகங்கை மாவட்டத்தில் மே 26 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம்;

Update: 2023-05-18 08:30 GMT

பைல் படம்

சிவகங்கை மாவட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; வருகின்ற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தகவல் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களைத் தவிர, பெரும்பாலும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புள்ள கருத்துகளை மட்டும் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு இக்கூட்டங்களுக்கு விவசாயிகள் அழைக்கப்படுகின்றனர்.இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தபால் மூலமும் செய்தித்தாள்கள் மூலமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; வருகின்ற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற உள்ளது.

மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், பங்கேற்கும் இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News