சிவகங்கையில் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வருகின்ற 29.03.2023 அன்று முன்னாள் படைவீரர் களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது;

Update: 2023-03-17 10:45 GMT

பைல் படம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்  வருகின்ற 29.03.2023 அன்று நடைபெறவுள்ளது

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர்சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில், வருகின்ற 29.03.2023 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படவுள்ளது.

எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் , படைவீரர் சார்ந்தோர் வருகின்ற 29.03.2023 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு, முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, வருகை புரிந்து, தங்களது குறைகளை மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி. தெரிவித்துள்ளார்.

முன்னாள் படை வீரர் மற்றம் அவர்களை சார்ந்தவர்களின் குடும்ப ஒய்வூதியம் தொடர்பான குறைகள் (https://raksshapension.desw.gov.in)  உட்பட ஓய்வூதியத்தை விரைவாக நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இராணுவ ஓய்வூதிய புகார் தீர்வு இணைய முகப்பு 14.01.2022 அன்று தொடங்கப்பட்டது. இந்த இணைய முகப்பு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் குறைகளை விரைவாகசெயலாக்கும். இதன் மூலம், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது விண்ணப்பம் குறித்த நிலை அறிய அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் புகார் பதிவு உறுதி செய்து அனுப்பப்படும். குறைகளைத் தீர்ப்பதற்கான தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக விண்ணப்பதாரர்கள் தங்கள் கருத்துகளையும் வழங்கலாம் என  முன்னாள் ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.



Tags:    

Similar News