சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாலுகோட்டை ஊராட்சியில், நடைபெற்ற 28-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2022-04-30 10:01 GMT

சிவகங்கை அருகே, நாலுகோட்டை ஊராட்சியில், நடைபெற்ற 28-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், நாலுகோட்டை ஊராட்சியில், ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில், நடைபெற்ற 28-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்தும் பணியிளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இது குறித்து தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, 12.09.2022 முதல் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12-09-2021 முதல் 09-04-2022 வரை 28 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 7,27,980 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 16.01.2021 முதல் 28.04.2022 வரை மொத்தம் 19,95,541 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசிகள் 10,83,791 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதில்; 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 54,290 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில்; 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 38,565 நபர்களுக்கு கோர்பிவேக்ஸ் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 9,01,741 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 31,296 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 15,057 நபர்களுக்கு கோர்பிவேக்ஸ் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை தடுப்பூசி னுழளந) 10.01.2022 முதல் 10,009 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக சனிக்கிழமை 30.04.2022 அன்று 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 86 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் 714 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 800 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில், பயனாளிகளுக்கு செலுத்த கோவிஷ-ல்டு 45,000கோவாக்சின் தடுப்பூசி 70,000, கோர்பிவேக்ஸ் 22,500 மருந்துகளும் மொத்தம் 1,37,500 தடுப்பூசிகள் மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கொரோனா நோய்த்தொற்றில், இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மற்றும் 60 வயதினை கடந்த அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி அவசியம் செலுத்திக் கொண்டு அரசால், மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச.ராம்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News