அலங்காநல்லூர் அருகே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு
அலங்காநல்லூர் அருகே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
அலங்காநல்லூர் ஓன்றியத்திற்கு உட்பட்ட, சின்ன இலைந்தக்குளம் கிராமத்தில், இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தங்கி இருந்து பணிபுரியும் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தினேஷ்குமார், மூக்கையன் , நிவேத் குமார், விக்னேஷ், ராகேஷ், அருண் ஜே.சி, கிருஷ்ணக்குமரன், நந்தக்குமார், குருசாமி ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர் .