சிவகங்கையில், பிராணிகள் வதை தடுப்பு சங்கக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்
சிவகங்கையில், பிராணிகள் வதை தடுப்பு சங்கக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்;
சிவகங்கையில், பிராணிகள் வதை தடுப்பு சங்கக் கூட்டம்: ஆட்சியர்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், பிராணிகள் வதை தடுப்புச் சங்க அரசு அமைப்பு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் அடங்கிய மேலாண்மைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில், சங்கத்தின் அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் அடங்கிய 2023-24ம் ஆண்டிற்கான இரண்டாவது அரையாண்டு மேலாண்மைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், காரைக்குடி மற்றும் சிவகங்கை நகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை கூடம் அமைப்பதற்கு நடவடிக்கையும், கிராம ஊராட்சி பகுதியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திட “வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்தின்” கீழ் “நடமாடும் செல்லப்பிராணிகளுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை ஊர்தி திட்டத்தின்” மூலம் செயல்படுத்திடவும் அரசுக்கு பிரேரணை அனுப்பிட விவாதிக்கப்பட்டது.
மேலும், “வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்தில்” பங்கு கொள்ள விருப்பம் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 04575-240415 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்.ராமசந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.