அணைக்கரைப்பட்டி பாலம் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது
அணைக்கரைப்பட்டி பாலம் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு ஒருவர் பொது இடங்களில் நடமாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
அதைத் தொடர்ந்து ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்திய, சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர், அணைக்கரைப்பட்டி பாலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவிக் கொண்டிருந்த ஒருவரை சோதனை செய்து பார்த்த பொழுது அவரிடம் இரண்டு அடி நீளமுள்ள பட்டாக்கத்தி இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.
உடனடியாக, அவரை சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கும் பொழுது, அவர், சிங்கம்புணரி கக்கன்ஜீ நகரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் அஜீத்குமார் (வயது22) என்பது தெரியவந்தது.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு பிரிவின்கீழ் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் இவர் நீண்ட நாட்களாக தேடப்படும் குற்றவாளியாவார்.
அதன்பின்பு அஜீத்குமாரை கைது செய்து சிங்கம்புணரி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.