12 வட்டார வள பயிற்றுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு

Employment News In Tamil - ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் இந்த வட்டார வள பயிற்றுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Update: 2022-08-09 08:30 GMT

பைல் படம்

Employment News In Tamil - 12 வட்டார வள பயிற்றுநர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால்  தகுதியுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  ப. மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (மகளிர் திட்டம்) வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு காளையார்கோவில், கல்லல், சாக்கோட்டை, சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், சிவகங்கை, இளையான்குடி, தேவகோட்டை, கண்ணங்குடி, எஸ்.புதூர், ஆகிய 12 வட்டாரங்களில் தலா 1 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. தகுதியுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராகவும், பட்ட படிப்பு அல்லது அதற்கு மேலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும், மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். சுயஉதவிக்குழு – ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு – வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகிய ஏதேனும் ஒன்றில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மாதாந்திர தொகுப்பு ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படவுள்ளன.

பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதிகள் மற்றும் விண்ணப்பப்படிவங்கள் ஆகியவை www.sivaganga.nic.inஎன்ற மாவட்ட இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர் -திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு நேரிலோ (அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள்) அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 16.08.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, ஜாதிச்சான்று, முன்னுரிமைச்சான்றிதழை கண்டிப்பாக இணைக்க வேண்டும். விண்ணப்பபடிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். அவ்வாறு இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியில்லாத மற்றும் காலம் கடந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News