சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறை குறித்து மாணவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடினார்.

Update: 2023-08-30 05:56 GMT

சிவகங்கை அருகே காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை அருகே  உள்ள காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு, கற்பிக்கப்படும் முறை குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர், வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறை குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

மேலும், மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் இப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நூலகத்தில் மாணக்கர்களின் பயன்பாடு, நூலகத்தில் புத்தக இருப்பு, கூடுதலாக நிறுவ வேண்டிய புத்தக வகைகள் ஆகியன குறித்தும் மற்றும் பள்ளி சமையலறையில் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர், உணவருந்தி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும்,  கழிப்பறை வசதிகள் பயனற்ற நிலையிலுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்துதல் மற்றும் புதிதாக கட்டப்பட வேண்டிய கூடுதல் கட்டிடங்கள் , கூடுதல் ஆசிரியர்களின் தேவை ஆகியன குறித்தும் அப்பள்ளியில் மேம்படுத்த வேண்டிய கூடுதல் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News