சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் திறன் பயிற்சி முகாம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது;

Update: 2022-07-19 05:00 GMT

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தலைமையில், திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்ற இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காகவும், இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், வேலைக்கேற்ற திறன் குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை ஒருங்கே பெறுவதற்கும், வேலை வாய்ப்பிற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவதற்கும் மற்றும் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பினை பெற்றிட ஏதுவாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில், இளைஞர் திறன் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 'இளைஞர் திறன் திருவிழா" நடைபெற்றது.

இம்முகாமில், உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த வேலைநாடும் இளைஞர்கள் பங்கேற்றனர்.பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் பங்கு பெற்று வேலைநாடும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு தேர்வு செய்தனர்.

Tags:    

Similar News