Voter List Special Camp சிவகங்கை அருகே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்
Voter List Special Camp சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்ந டந்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் சிறப்பு முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
Voter List Special Camp
வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவள்ளி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான நடைபெற்றுவரும் சிறப்பு முகாம்களில்சிவகங்கை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர்சுந்தரவள்ளி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்கம் , முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான நடைபெற்றுவரும் சிறப்பு முகாம்கள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களில், நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கம் , முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள், சிவகங்கை மாவட்டத்தில் இன்றையதினம் 04.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும், வருகின்ற 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும், சிறப்பு முகாம்கள், அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட நாட்களில், நடைபெறும் சிறப்பு முகாம்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Helpline செயலி , https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.
மேலும்,இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான நாட்களில் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை ,தேவகோட்டை ஆகிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான முறையான அறிவிப்புக்களும் வழங்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் இம்முகாம்களின் வாயிலாக தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில், புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் ஆதார் எண்ணை சுயவிருப்பத்துடன் இணைத்தல், தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, படிவங்கள் உரிய வழிமுறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டைவகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என, வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவள்ளி, தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்).மேசியாதாஸ், வட்டாட்சியர்கள் சிவராமன் (சிவகங்கை),ஆனந்த் (திருப்பத்தூர்), துணை வட்டாட்சியர் (தேர்தல்) மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.