கல்லூரி பேருந்தை வழிமறித்து போதையில் ரகளை செய்த மூன்று பேர் கைது
குடிபோதையில் பேருந்தை வழிமறித்து மது பாட்டிலை வைத்து பேருந்து முன் படுத்து ரகளையில் ஈடுபட்டதாக கைது;
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இம்மாதம் 15-ஆம் தேதி குமாரகுறிச்சி அருகே தனியார் கலைக் கல்லூரி பேருந்து சென்ற பொழுது, பேருந்தை வழிமறித்து குடிபோதையில், பேருந்து முன் மது பாட்டிலை வைத்து படுத்தும் ரகளையில் ஈடுபட்டதாக குமாரகுறிச்சி சேர்ந்த மூன்றுபேர் மீது இளையான்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேரை தேடி வந்த நிலையில் இன்று குமார குறிச்சி சேர்ந்த ஆனந்தராஜ், அவின்குமார், கருள்ரோஹித்ஆகிய 3 பேரை இளையாங்குடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்