சிவகங்கை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்
அன்னவாசல் கிராமத்தில், வருகின்ற 18.05.2023 அன்று காலை 10.மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது;
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், அன்னவாசல் கிராமத்தில்,வருகின்ற 18.05.2023 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மானாமதுரை உள்வட்டம், அன்னவாசல் குரூப், அன்னவாசல் கிராமத்தில், வருகின்ற 18.05.2023 அன்று காலை 10.மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
மக்கள் தொடர்பு முகாமில், அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இம்மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.