திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனித் திருவிழா

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழா இரண்டாம் நாளில் 71 வது ஆண்டு மண்டகப்படி விழா நடைபெற்றது

Update: 2023-03-29 06:30 GMT

சிறப்பு அலங்காரத்தில் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன்

திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழா இரண்டாம் நாள் மண்டகபடி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது ஆண்டு இரண்டாம் நாள் மண்டகப்படி விழா நடைபெற்றது.

விழாவை ஒட்டி காலை 8 மணிக்கு அம்பாள், சுவாமி அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.  காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பனேஸ்வரர் சுவாமி கற்பக விருச்ச வாகனத்திலும், சௌந்தர நாயகிஅம்பாள் காமதேனு வாகனத்திலும் அதிர் வேட்டுகள் முழங்க பக்தர்கள் புடை சூழ நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை வந்தடைந்தனர்.சுவாமி அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளும் உடன் சென்றனர்.

விழாவில் ருக்மணி பழனிவேல்ராஜன், தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டாக்டர் விஜய் ராஜன், குரு மருத்துவமனை டாக்டர் பாலமுருகன், மாவட்ட நீதிபதி ஓய்வு தட்சிணாமூர்த்தி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, குரு மருத்துவமனை மேலாண் இயக்குனர் கல்பனா மற்றும் ஏராளமான பக்தர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மண்டகப்படி உபயதாரர் மயில்வேல் குடும்பத்தினர் செய்திருந்தனர்

Tags:    

Similar News