ஊராட்சி எழுத்தர் கொலை: பூவந்தி போலீசார் விசாரணை

சொததுப்பிரச்னை காரணமாக சொந்தத் தம்பியே இவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது;

Update: 2021-12-16 05:52 GMT

கொலைசெய்யப்பட்ட ஊராட்சி எழுத்தர் உதயசூர்யா

கல்லூரணி ஊராட்சி எழுத்தர் கோனார்ப்பட்டியில் உள்ள அவரது  வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த பூவந்தி அருகே கிளாதரி கோனார்பட்டியைச் சேர்ந்தவர் அதியமான் மனைவி உதயசூரியா. இவர் கணவர் இறந்து விட்ட நிலையில் தனது இரண்டு மகன்களுடன் கோனார் பட்டியில்வசித்து வருகிறார்.மேலும் உதய சூர்யா கல்லூரணி கிராமத்தில் ஊராட்சி எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று உதய சூர்யாவின் தம்பி ஆசைக் கண்ணன் கிளாதிரியில் கோவில் திருவிழாவிற்கு வந்தபோது, தனது தனது மனைவியுடன் கோனார் பட்டியில் உள்ள தனது சகோதரி உதய சூர்யா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உதயசூர்யாவிற்கும் தம்பி ஆசைகண்ணனுக்கும் இடையே சொத்து பிரச்சனையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த ஆசைக் கண்ணன் கம்பியால் உதயசூரியாவை தாக்கியதில் உதய சூரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூவந்தி போலீசார், உதயசூரியா உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News