சிவகங்கை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள்: அமைச்சர் திறப்பு

New Buildings Inaugural Function கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ . 61 . 58 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 திட்டப்பணிகளைதிறந்து வைத்தார்;

Update: 2024-01-05 09:44 GMT

சிவகங்கை மாவட்டத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். 

New Buildings Inaugural Function

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கான கட்டிடம் ஆகியவைகளை திறந்து வைத்து தெரிவிக்கையில்:

முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஜனநாயகத்தின் ஆணிவேராக திகழ்கின்ற கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் அனைத்து மேம்பாட்டு வசதிகளையும் மேம்படுத்திடும் பொருட்டு, அதற்கான நடவடிக்கைகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் திகழ்கிறது. கிராமங்களில் அடிப்படை தேவைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அதன் காரணமாக கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்த்திடும் பொருட்டும், அனைத்து அடிப்படைக் கட்டமைப்புக்களை மேம்படுத்தி, தேவைகளை நிறைவேற்றும் விதமாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கென ஒவ்வொரு ஊராட்சியிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான அலுவலகங்களை , அனைத்து நவீன இனையதள வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக தங்களது கோரிக்கைகளை எளிதில் பதிவு செய்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சியிலும்ஊராட்சி மன்ற அலுவலங்களுக்கான புதிய கட்டிடங்கள் ஏற்படுத்தி தரப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிற்கிணங்க புதிய ஊராட்சி மன்ற அலுவலங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் , இன்றைய தினம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொட்டதட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பத்தூர் ஊராட்சியில் ரூ.25.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் , அதே பகுதியில்இ ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கான கட்டிடம் என மொத்தம் ரூ.61.58 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற 3 திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மற்றும் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்,வேம்பத்தூர் ஊராட்சியில் நடப்பாண்டில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்

கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும். இதுதவிர ,அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழும் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், இவ்வூராட்சியின் கூடுதல் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, தற்போது ஊராட்சியின் சார்பில் கோரிக்கைகளும் வரபெற்றுள்ளன. அப்பணிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அத்திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படையானதாகும். எனவே ,

தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான உரிய வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, ஊராட்சி மன்றத்தலைவர்கள்ரேவதி(சொட்டதட்டி), வி. எம். சமயமுத்து(வேம்பத்தூர்) , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.சாந்தி (திருப்புவனம்), லூயிஸ் ஜோசப் பிரகாஷ் (மானாமதுரை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News