திருமணமான பெண் தூக்கு போட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் தகனம் செய்ய முயற்சி

கோமதியின் இறப்பிற்கு காரணமான கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் கோமதியின் உடலை வாங்க மறுத்துள்ளனர்;

Update: 2022-01-22 07:30 GMT

மானாமதுரை அரசு மருத்துவமனையில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்

திருமணமான பெண் தூக்கு போட்டு தற்கொலை, போலீசாருக்கு தெரியாமல் உடலை எரிக்க முயற்சி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே குவளைவேலி கிராமத்தில் கண்ணன் மனைவி கோமதி(27) என்பவர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப‌ பிரச்னையில் நேற்று மாலை தனது வீட்டின் உள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்த போது இறந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக கோமதியின் பெற்றோர் வீட்டிற்கு தொடர்பு கொண்டு கோமதிக்கு நெஞ்சுவலி என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் போன் செய்து கோமதி இறந்துவிட்டதாகவும் அவரது உடல் குவளைவேலி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்லப்படுவதாகவும்  தெரிவித்துள்ளனர். சந்தேகமடைந்த கோமதியின் உறவினர்கள் குவளைவேலியில் இருந்த கோமதியின் உடலை கைப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்ராய்வுக்காக கொண்டு சென்றனர்.

கோமதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், கணவர் கண்ணன் தான் தனது மகளை அடித்து கொன்றுவிட்டதாகவும், கோமதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கோமதியின் இறப்பிற்கு காரணமான கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் கோமதியின் உடலை வாங்க மறுத்துள்ளனர். கோமதி கண்ணன் தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், ஹரீஸ் (7), ரிச்சிதா மஹாலெட்சுமி(2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோமதியின் கணவர் கண்ணன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக சொந்தஊருக்கு வந்துள்ளார். வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News