தேவகோட்டை அருகே அரசின் புகைப்படக் கண்காட்சி: ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்
நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கும் புகைப்படக்கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், இடையன்குளம் ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், இடையன்குளம் ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொரோனா நிவாரண உதவித்தொகை,
மக்களைத் தேடி மருத்துவம், மலைக் கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா மருத்துவ சிகிச்சை, திருமண நிதியுதவித் திட்டம், இளம்வயது திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு, கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா மற்றும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்த புகைப்படங்கள் என நூற்றுக்கும் ம் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
புகைப்படக் கண்காட்சியை, பார்வையிட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் மேலும், அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் இப்புகைப்படக்கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர். இப்புகைப்படக் கண்காட்சியினை அமைக்கும் பணியை, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலுவலர்கள் செய்திருந்தனர்.