விலையில்லா மிதிவண்டி திட்டம்: சிவகங்கை மாவட்டத்தில் 10 ,593 பேருக்கு வழங்கல்

பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டமாக இத்திட்டம் திகழ்கிறது;

Update: 2023-08-09 07:15 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின்.(பைல் படம்)

சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணாக்கர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு  தங்களது மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். அதில், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அறிவுப் போட்டி நிறைந்த இக்கால கட்டத்தில் மாணவர்கள் நவீன காலத்திற்கு ஏற்ப தங்களது அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, சாமானிய மக்களும் தரமான கல்வியை பெரும் வகையில், பள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரி வரையிலும் இலவசமாக கல்வியை மாணாக்கர்கள் பெறுவதற்கும்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தலை சிறந்து விளங்கிடும் மாநிலமாக தமிழகம் திகழ்நதிடும் வகையில் தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, மாணாக்கர்களுக்கு அறிவுக் கூர்மை ஏற்படுத்துவது மட்டுமின்றிஇ ஆரோக்கியமான உடல் நலத்தையும் அளிப்பதற்காக சத்தான உணவுகளை வழங்கிடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் , அறிவிக்கப்பட்டு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறது.

இதுபோன்று பெற்றோர்களின் சிரமத்தை பொருளாதார ரீதியாக குறைத்து விடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்து மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களின் நிலையிலிருந்து அனைத்து நலத் திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள்.

பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் ஒன்றான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியருக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4270 மாணவர்கள் மற்றும் 6323 மாணவியர்கள் என , ஆக மொத்தம் 10593 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதில், மாணவியர்களுக்கு தலா ரூ.4760 மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4900மதிப்பீட்டிலும் என, மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி  யோகலெட்சுமி  தெரிவிக்கையில், நான், சக்கந்தி ஊராட்சியிலிருந்து எனது பள்ளிக்கு வருகிறேன்.மினி பேருந்தின் மூலம் பள்ளிக்கு வருகை புரிந்து வந்தேன். முன்னதாக ,சில நேரங்களில் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை இருந்தது.

அதனால், எனது படிப்பில் முழுமையான கவனமும் செலுத்த இயலாமல் இருந்தது. அச்சமயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, என்னை போன்ற மாணவியர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் பள்ளியின் மூலம் வழங்கப்பட்டது. தற்சமயம் நான் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகிறேன்.வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்

சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சரண்யா  கூறியதாவது:  நான், பெருமாள்பட்டி ஊராட்சியிலிருந்து எனது பள்ளிக்கு வருகிறேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு மிதிவண்டியில் பள்ளிக்கு வருவதற்கு மிகுந்த ஆசை இருந்தது. எனது குடும்ப சூழ்நிலையின் பொருளாதார ரீதியாக மிதிவண்டி வாங்குவதற்கான போதுமான அளவில் பொருளாதார வசதி இல்லை.என்னைப் போன்ற மாணவியர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையில், விலையில்லா மிதிவண்டி அளித்துள்ள முதலமைச்சர் நன்றி கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.  

தொகுப்பு:  இரா.சண்முகசுந்தரம்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மு.ராஜசெல்வன்.உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சிவகங்கை மாவட்டம்.

Tags:    

Similar News