சிவகங்கை மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகள், கிராமப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு கிராம ஊராட்சிகளின் உள்கட்டமைப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு, சுகாதாரம், அடிப்படைக் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, கைவினைத்தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழியாக ஊராட்சி ஒன்றியங்கள் மேற்கொள்கிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் ) சுவவலம்பன் திட்டம், அமைப்புச்சார தொழிலாளர்களுக்குதுப்புரவு இந்தியா இயக்கம், ஜனனி சுரக்ச யோஜனா,முத்ரா வங்கி, முன்மாதிரி கிராமத் திட்டம்,பிரதம அமைச்சர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் கிராம தன்னிறைவுத் திட்டம், தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம், நமக்கு நாமே திட்டம் (Namakku Naame Thittam) (NNT) ,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஊரக உள்கட்டமைப்பு திட்டம், ஊரக கட்டிட பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம், முழு சுகாதாரப் பிரச்சார இயக்கம், திடக் கழிவு மேலண்மைத் திட்டம், கிராமப்புறச் சாலைகள் மேம்பாடுத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற செய்வது மட்டுமன்றி, மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும், வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக, கிராமப் புறப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்துப்பட்டு வருகிறது.
மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் 15வது நிதிக் குழுவின் மூலம் ரூ.50,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார ஆய்வக பணிகளை மேற்பார்வையிட்டு மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.48 இலட்சம் மதிப்பீட்டில் வாராச்சந்தை விற்பனைக் கூடாரம் அமைத்தல்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் மானமதுரை ஒன்றியம் கல்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி மன்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.46 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி சங்க கட்டிடம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திட்டத்தின் கீழ் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் மானாமதுரையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி செயற் பொறியாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரபரமேஸ்வரி ரஜினி தேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்