கீழடி அருங்காட்சியகத்தில் அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு
கீழடி அருங்காட்சியகத்தில் கூடுதல் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அரசு முதன்மைச் செயலர் ஆய்வு செய்தார்;
கீழடி அருங்காட்சியகத்தில் கூடுதல் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அரசு முதன்மைச் செயலாளர் - சிறப்பு செயலாக்க திட்டம், டி.உதயசந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அருங்காட்சியகத்தில் கூடுதலாக மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து அரசு முதன்மைச் செயலாளர் - சிறப்பு செயலாக்க திட்டம் டி.உதயசந்திரன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்கின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமன்றி சங்ககால தமிழர்கள் நகர நாகரிகத்துடன் 2600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வாழ்ந்துள்ளனர் என்பதை உலகளவில் அறியப்படுத்துகின்ற வகையிலும், தமிழர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையிலும் உலகளவில் பல்வேறு நாடுகளும் தமிழகத்தை வியக்குகின்ற வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் , சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதற்கு சான்று தற்போது, கீழடியின் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பியிருக்கிறதே ஆகும். வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய தொல்பொருட்களை, உலகத்தமிழர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர்கள் பார்த்து அறிந்து கொள்கின்ற வகையில் , அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர், அறிவுறுத்தப்பட்டு தற்போது 9-வது கட்ட அகழ்வராய்ச்சி பணியினையும் , 06.04.2023 அன்று தொடங்கி வைத்தார். தற்போது அதற்கான பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம், மட்டுமன்றி,மண்டல வாரியாகவும் சில மாவட்டங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று,சங்காலத் தமிழர்களின் புகழை வெளிக்கொணரச் செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த அகழாய்வுப் பணிகளின் போது, கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்குகின்ற வகையில், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 05.03.2023 அன்று நேரில் வருகை புரிந்து திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவ்அருங்காட்சியத்தில், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, அரசின் அறிவுரையின்படி சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், பொதுமக்களின் வசதிக்காக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வலைத்தளம் வழியாக பணம் செலுத்தும் முறைகள், சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்பதற்கென பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தப்படும். அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள பொருட்களில், மாதிரி வடிவ பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவப்படும். அருங்காட்சியத்தினுள் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்தும் வழிதடங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் வரலாற்று குறிப்புகளை தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கென துறை சார்ந்து கூடுதலாக வழிகாட்டிகளை நியமிப்படுவார்கள். இதற்கென தொல்லியல் துறையில் ஆர்வத்தின் அடிப்படையில் இப்பகுதிகளை சார்நத்வர்களை வழிகாட்டிகளாக நியமனம் செய்து அதற்கென முறையான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்கப்படும்.
வார இறுதிநாட்களில் தற்போதுள்ள நேரத்தை கூடுதலாக 1 மணிநேரம் மாலைவேளையில் அதிகரித்திடவும், பொதுமக்களின் வருகையை பொருத்து குறும்படங்களை தொடர்ந்து திரையிடப்படும். கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்தப்படும். அருங்காட்சியகத்தினுள்ள ஒவ்வொரு பிரிவிலும் அவைகள் சார்ந்த புத்தகங்கள் வைக்கப்படும். மகளிர்சுய உதவிகுழுக்களின் சார்பில் இயங்கி வரும் சிற்றுண்டி உணவகத்தின் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை தரமான முறையில் பொது மக்களுக்கு வழங்கவும், அதற்கான விலைப்பட்டியலினை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் வைக்கப்படும் இதுபோன்று பல்வேறு கூடுதல் வசதிகளை மேம்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அரசு முதன்மைச் செயலாளர் - சிறப்பு செயலாக்க திட்டம் டி.உதயசந்திரன், தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம் (சென்னை) முதன்மை பொறியாளர் இரா.விஸ்வநாத், தலைமை பொறியாளர்(மதுரை மண்டலம்) சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்(சென்னை) எஸ்.மணிகண்டன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.