கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதியினர்

கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் பார்வையிட்டனர்.;

Update: 2023-04-02 10:30 GMT

கீழடி அருங்காட்சியகத்தில் நடிகர் சூர்யா -ஜோதிகா தம்பதியினர்.

கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் பார்வையிட்டனர்.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய மாநில அரசுகளின் தொல்லியல் துறைகள் சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த ஆய்வின் முடிவில் பண்டைக்கால தமிழர்களின் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் கிடைத்தன. மேலும் கட்டிடக்கலைக்கான ஆதாரங்களும் கண்டெடுக்கப்பட்டன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்டிருந்த அந்த கட்டிங்களில் மழை நீர் வடிகால், கழிவறைகள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகர்கள் பண்டைக்காலத்தில் எவ்வளவு நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் கிடைத்தது. அவை சிந்து சமவெளி நாகரீகத்தையும் மிஞ்சுவதாக இருந்தது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு மிக பிரமாண்டமான ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியத்தை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கீழடி அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து  இதனை, தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது ,மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Tags:    

Similar News