உலக வெறிநோய் தடுப்பு தினம்: வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்

காரைக்குடியில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.;

Update: 2021-09-28 12:45 GMT

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை எம்எல்ஏ மாங்குடி தொடங்கி வைத்தார்.

செல்லப் பிராணிகளால் அதன் உரிமையாளர்களுக்கு நோய் தாக்காமலும், உயிர் இழப்பு ஏற்படாமலும் தடுப்பதற்காக செப்டம்பர் 28ம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது.

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தொடங்கிவைத்த இந்த முகாமில் ஏராளமான வளர்ப்பு நாய்கள் கொண்டுவரப்பட்டு, தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News